search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர்கள்"

    • முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    மேசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் மற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாவட்டம் முழுவதும் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி, துணைச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரமேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார் நடராஜ், பிளைட் லெப்டினன்ட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நல சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் இந்த நிதிவழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது.

    இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்தத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என பதிவிட்டுள்ளார்.

    ×